புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒரு கோடி ரூபாய் கடன்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் கடன்மானியம் வழங்கப்படும்.
இந்த கடன் மானியத்திற்கான வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த கடன் தொகையின் மாதாந்த கொடுப்பனவுகளை, அதனைப் பெறுகின்றவர் வெளிநாடுகளில் பணியாற்றும் காலத்தில் வெளிநாட்டு நாணயமாக சட்டரீதியான மார்க்கத்தில் செலுத்த வேண்டும்.
அவர் நாடு திரும்பியதன் பின்னர் இலங்கை ரூபாவில் செலுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
