ரயில்வே நிலைய அதிபர்கள் உட்பட 12 ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்தின், ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் உட்பட 12 ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவையைப் பராமரிப்பது கடினமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக, தொடர்புடைய நிலைய அதிபர்கள் மற்றும் ஊழியர்களின் நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன்படி, களுத்துறை, இந்துருவ மற்றும் கொலன்னாவ ரயில் நிலையங்களில் ஊழியர்களின் கோவிட் தொற்று காரணமாகப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன
இத்தகைய சூழ்நிலையில், ரயில்வே ஊழியர்கள் தமது சேவைகளை வழங்குவதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




