திருகோணமலை இரவு நேர உணவகங்கள் மீது திடீர் சோதனை(Photos)
திருகோணமலை- உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இரவு நேர உணவகங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திடீர் சோதனை
உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உணவகங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இன்று (03.11.2022) உப்புவெளி பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் சில உணவுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைகள்
அலஸ்தோட்டம், செல்வநாயகபுரம் மற்றும் மூன்றாம் கட்டை பகுதிகளில் இயங்கி வரும் இரவு நேர உணவகங்கள் சில சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோவிட் முடிவடைந்ததையடுத்து திருகோணமலை நகர்ப்புர உணவகங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் உணவகங்களை சோதனையிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri