விவசாயிகளுக்கான மானிய விலையில் உர விநியோகம்
கமத் தொழில் அமைச்சுக்குச் சொந்தமான அனைத்து உரக் களஞ்சியங்களும் தற்போது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் போதுமான அளவில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அதற்கு ஏதுவாக தற்போதைக்கு கொழும்புத் துறைமுகத்துக்கு மூன்று கப்பல்கள் உரம் ஏற்றிக் கொண்டு வந்துள்ளன.
சலுகை விலையில் உரம்

அவற்றில் இருந்து இறக்கப்படும் உரம் நேரடியாக கமத் தொழில் அமைச்சின் உரக் களஞ்சியங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
விவசாயிகளுக்கு ஒரு மூட்டை உரம் பத்தாயிரம் ரூபா சலுகை விலையில் வழங்குவதற்காக அரசாங்கம் பதினெட்டு மில்லியன் ரூபாவை மானியமாக ஒதுக்கியுள்ளது.
அத்துடன் நாளை முதல் விவசாயிகளுக்கான மானிய விலையில் நாடெங்கும் உர விநியோகம் நடைபெறவுள்ளது.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri