இலங்கையின் சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள இடநெருக்கடி
இலங்கையின் (Sri Lanka) சிறைச்சாலைகளில் தற்போதைக்கு அதிகூடுதலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மட்டுமன்றி சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
அடிக்கடி வழங்கப்படும் பொதுமன்னிப்பு
சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வழியின்றி, செலுத்தத் தவறிய பல்லாயிரக்கணக்கானவர்கள் தற்போதைக்கு சிறைச்சாலைகளில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இவ்வாறான சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே தற்போதைக்கு சிறைச்சாலைகளில் பாரியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறைக்கைதிகளுக்கு அடிக்கடி வழங்கப்படும் பொதுமன்னிப்புகளின் போது சட்டவிரோத மதுபானம் தயாரித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும் நபர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏனைய கைதிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam