கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.
விமான நிலைய பொலிஸார்
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 தங்க நெக்லஸ்கள், 1 பென்டன், 02 வளையல்கள், 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam