அம்பாறையில் கடும் வெப்பம் காரணமாக குறைந்துள்ள மக்கள் நடமாட்டம்
நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதால் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
இதன் காரணமாக, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை மற்றும் மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்குகின்ற போதிலும் மக்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது.
அதிக வெப்பம்
மேலும், அரச தனியார் போக்குவரத்துக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் மட்டுப்படுத்த மட்டிலேயே இடம்பெறுகின்றன.
இது தவிர அரச தனியார் வங்கிகள் திறந்துள்ளதுடன் மக்கள் வருகை குறைந்தளவில் காணப்படுவதுடன் சில இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சவளக்கடை மத்தியமுகாம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் அதிகளவான நீர் வாய்க்கால் ஊடாக வெளியேறுகின்றது. இவ்வாறு வெளியேறும் நீரில் மக்கள் வெப்பத்தை தணிப்பதற்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா சென்று நீராடுகின்றனர்.
வியாபார நடவடக்கைகள்
மேலும், பிரதேச செயலகங்கள் நீதிமன்றங்கள் வங்கிகள் பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்குகிறது.
எனினும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன் இரவு வேளையில் அதிகளவில் நடமாடி வருகின்றனர்.
சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |















Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
