நான்கு மாதங்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு லட்சம் பேர்!
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை இதுவரை ஓரு இலட்சத்தை எட்டியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கங்களின் தகவல்படி, 2022 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 8 வரை 100,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிக தேவை உள்ளது. இதனையடுத்து பெருமளவான இலங்கையர்கள் அங்கு செல்கின்றனர்
இந்தநிலையில் 2020ல் 53,711 ஆக இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புறப்பாடு 2021ல் 126.8 சதவீதம் அதிகரித்து 121,795 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது.
அத்துடன் வீட்டுப் பணிப்பெண் பிரிவுகளுடன் ஒப்பிடுகையில், தொழில்முறை, நடுத்தர நிலை மற்றும் ஏனையவர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் வீட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேறும் பெண்களின் எண்ணிக்கை 2020ல் 28.5 சதவீதமாக இருந்து 2021ல் 24.1 சதவீதமாக குறைந்துள்ளது.
கட்டார்;, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் போன்ற மத்திய கிழக்கு பிராந்தியம், 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான மொத்தப் புறப்பாடுகளில் 84.8 சதவீதத்தைக் கொண்டிருந்தது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
