ஏற்கனவே வெற்றி உறுதியாகியுள்ளது – அனுரகுமார
ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி உறுதியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமது வெற்றி உறுதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாரியளவில் தமக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொள்கையற்ற அரசியல்வாதிகள்
குறிப்பிடத்தக்களவு இடைவெளியில் தாம் வெற்றியீட்டுவது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நாடாளுமன்றில் பல உறுப்பினர்கள் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியிட்ட கட்சியை விட்டு தாவி வேறும் கட்சிக்கு ஆதரவளித்து வருவதாகவும் கொள்கையற்ற அரசியல்வாதிகள் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை ஆசனங்கள்
எனவே ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் உடன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு வலுவான அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றிலும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் என அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri