எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது - காணாமல் போனவர்களின் உறவுகள்
தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. அதனை உருவாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தமிழர்களுக்குத் தேவை என்று வவுனியாவில் கடந்த 1616 நாட்களாகப் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முதலில், கோவிட் - 19 தடுப்பூசி அனுப்பிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பைசர் மற்றும் மொடர்னா இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதும் 99% செயல்திறன் மிக்கது என்பதும் உலகம் அறிந்ததே.
நம் சொந்த நிலத்தில், குறிப்பாகக் குழந்தைகளையும், கணவனையும் இழந்த தாய்மார்கள், அன்றாட உணவுக்காகப் போராடுகிறார்கள் தற்போது, தமிழர்களின் பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளில் வாழும் உறவினர்களிடமிருந்து வருகின்ற பணமே. இது ஒரு உண்மையான பொருளாதாரம் அல்ல, இந்த பணம் பல சில குடும்பங்களுக்கு மட்டுமே உதவுகிறது.
எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது, குறிப்பாக, வேளாண்மை, வணிகம், மீன்பிடித்தல், கட்டமைப்புகள் சிதைவடைந்துள்ளன. 20 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
எனவே ஒரு பொருளாதாரத்தை உருவாக்கத் தமிழர்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது. சீனர்கள் தங்கள் கடல் அட்டைப்பண்ணையைக் கிளிநொச்சிக்குக் கொண்டு வர முடிந்தால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா நம் தாயகத்திலும் பல்வேறு பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் பொருளாதார முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முதலீடுகள் எங்களுக்கு மிகவும் தேவையானது.
இலங்கை சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகளாக, தமிழர்களின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையிலிருந்து எந்த உதவியும் முயற்சியும் செய்யப்படவில்லை.
அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தமிழர்களின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு இன்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.





அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam