இராணுவ நிர்வாகத்தின் கீழ் புனரமைக்கப்படும் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை
ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையானது இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டு புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த புனரமைக்கும் வேலைத்திட்டமானது கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டுப் போர் காரணமாக 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டுள்ளது.
இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம்
எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் புதுப்பிக்க மாறிமாறி வந்த அரசுகள் உறுதியளித்தும் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் குறித்த தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது என இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |