முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய சப்பற உற்சவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ விஞ்ஞாபனம் 25.06.2025 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் நாளையதினம் சப்பற உற்சவம் சிறப்புற இடம்பெற உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைவு பெற்றிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மகோற்சப விஞ்ஞாபனம் இடம்பெற்று வரும் நிலையில் 16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் 14 வது நாளான நாளை இரவு 9 மணியளவில் (08.07.2025) சப்பற உற்சவம் மிக பிரமாண்டமான முறையில் இடம்பெற இருக்கின்றது.
திருவிழா
எனவே தான்தோன்றீஸ்வரர் ஆலய பக்த அடியவர்கள் அனைவரும் எம்பெருமான் வீதி உலா வருவதனை கண்டு தரிசிக்க முடியும் என திருவிழா உபயகாரர்கள் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நாளை மறு தினம் (09) தேர்த்திருவிழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 7 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
