முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அதிபர் விவகாரம்: வடமாகாண பிரதம செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் பாடசாலை அதிபரின் நிதி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து விரிவான அறிக்கை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை பணித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் நிர்வாக நிதி முறைகேடு தொடர்பாக பாடசாலை சமூகத்தினரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை
எனினும், அந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண கல்வி மௌனம் காத்து வந்த நிலையில் வட மாகாண பிரதமர் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை குழு ஒன்றை அமைத்து தனக்கு விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உமா மகேஸ்வரனுக்கு எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |