அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்
அடுத்த வருடம் முதல் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாலியல் கல்வி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
பாலியல் கல்வி
இந்த முயற்சி குறித்து கலந்துரையாட உப குழுவொன்று களுத்துறை மாவட்டச் செயலாளரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அண்மையில் கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்ப மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்குப் பாலியல் கல்வித் திட்டங்களை தெளிவுபடுத்துவது குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, சிறுவர் கர்ப்பம் தொடர்பான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன், சிறுவர்களைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டங்களை ஏற்பாடு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |