அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
அரச அதிகாரிகள், ஓய்வுப் பெற்றுச் செல்லும்போது, அவர்களுக்கு அரசாங்கம் செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த திறைசேரி தடை விதித்துள்ளது.
செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட சில மூத்த அரச ஊழியர்கள், அரச செலவில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் ஓய்வுநாளை அரசாங்க செலவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

விதிக்கப்பட்டுள்ள தடை
ஓய்வுப் பெறுபவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை அரசாங்க பணத்தைப் பயன்படுத்தி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதற்கான தடையை திறைசேரி விதித்துள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65இலருந்து 60 ஆக மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் முடிவால் சுமார் 18,000 ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளனர்.

சுற்றறிக்கை
இந்த நிலையில், திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன , கடந்த வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் திறப்பு விழாக்கள், கடமைகளை பொறுப்பேற்கும் அதிகாரிகளின் செயல்பாடுகள், ஒன்றுகூடல் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு அரச பணத்தை பயன்படுத்தக்கூடாது என்று அவர் அறிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள
தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச
வங்கிகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam