அரச ஊழியர்கள் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு! இரத்தாகும் நடைமுறை
அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுற்றறிக்கை ரத்து
தற்போது அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை ரத்துச் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, பாடசாலைகளின் ஆசிரியைகள் இலகு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத் தந்தமையானது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில் சேலைகளை தவிர்த்து, இலகுவான ஆடைகளை ஆசிரியைகள் அணிந்து பாடசாலைகளுக்கு செல்கின்றமை தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான கருத்து ஒன்று பகிரப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சமூக ஊடகங்களின் கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி, இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
மாற்று திட்டம்
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,ஆசிரியைகளுக்கு சீருடைகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,ஆசிரியர் சீருடைகளுக்கான கொடுப்பனவுகளை இந்த தருணத்தில் முன்னெடுக்க முடியாது.
இதற்கான மாற்று திட்டம் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் அதனை விரைவில் நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்.
பொதுநிர்வாக அமைச்சர் என்ற வகையில் 2019 ஆம் ஆண்டு ஆடைகள் தொடர்பான சுற்றறிக்கையை பிரதமர் ரத்துச்செய்வார் என்றும் அறிவித்துள்ளார்.