யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்
புதிய இணைப்பு
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.
இதனைக் கண்டித்தே யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(25.08.2026) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்து வரப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
450இற்கும் மேற்பட்டோர்
இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா பெற்றவர்களிலிருந்து இந்த 400 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து இந்த நிகழ்வில் 450 இற்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு
YOU MAY LIKE THIS VIDEO