இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த விஜயம் அமையவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்தான இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக ஆய்வுக் செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.