ரணிலினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: ஐ.தே.கட்சியின் யாழ் அமைப்பாளர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வெற்றிபெறுவார் என்றும் அவரினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.தீவக அமைப்பாளர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத, இன பேதங்கள் கடந்த ஒரு தலைவராக 50 வருடங்கள் தனது அரசியல் வாழ்க்கையை ரணில் விக்ரமசிங்க கழித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தனது கட்சியை விட்டு சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.
எனவே, எமது உணர்வுகளை புரிந்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது வாக்குகளை அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
