இராணுவத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு-செய்திகளின் தொகுப்பு
சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்து இராணுவத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு,பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது.
நேற்று முதல் இந்த தடை நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.டி. ஹெராத் பிறப்பித்த உத்தரவின் மூலம் அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கு செயற்படும் அதிகாரிகளுக்கும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர் எந்த காரணத்தை கொண்டும் தனது அதிகாரப்பூர்வ அடையாளம் மற்றும் தகவல்களை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக வலைத்தளங்களில் இணைப்புகளைப் பதிவேற்றுவது, பதிவுகளை வெளியிடுவது, பதிவுகளை அனுப்புவது மற்றும் பகிர்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் தகவல்கள், எந்தவொரு நபர் அல்லது அமைப்பு பற்றிய அவதூறான அறிக்கைகள் மற்றும் இந்த நாட்டின் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு தகவலையும் பரிமாறிக்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது.
சீருடை அல்லது இராணுவ உபகரணங்களைக் காட்டும் சுயவிவரப் படங்கள் அல்லது அட்டைப் புகைப்பட வரைபடங்களைக் காண்பிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் சமூக வலைத்தள மென்பொருளைப் பயன்படுத்துவதில் இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் இராணுவத்தின் உருவத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மீறியுள்ளதாக சைபர் பாதுகாப்புப் பிரிவு அவதானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை தொடர்பான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,