பேங்கொக் குண்டுவெடிப்பு வழக்கு: தாய்லாந்து நீதிமன்றம் விதித்துள்ள கொடுங்கோல் தண்டனை
தாய்லாந்து - பேங்கொக்கில் உள்ள புகழ்பெற்ற எரவான் வழிபாட்டுத் தலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு தாய்லாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தாய்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமானதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததுடன் 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சக்கட்ட தண்டனை
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சீனப் பெருநிலப்பரப்பு மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் திட்டமிட்டு படுகொலை செய்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக சீனக் குடியுரிமை பெற்ற யுசுபு மியரைலி மற்றும் பிலால் முகமது ஆகிய இருவருக்கு இந்த உச்சக்கட்ட தண்டனையை பேங்கொக் தெற்கு குற்றவியல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து தீர்ப்பளிக்கப்படுவதற்கு சுமார் 10 ஆண்டுகளாகியுள்ளது.
சீனா முழுவதும் ஆதரவு
இராணுவ நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 400க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 10,000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த நீண்டகாலத் தீர்ப்பு தற்போது எட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், சீனாவில் ஒடுக்கப்படுவதாகக் கூறி தாய்லாந்திற்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்த 100க்கும் மேற்பட்ட உய்குர் இன மக்களை, தாய்லாந்து அரசு மீண்டும் சீனாவுக்கே வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யப்போவதாகக் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சீனா முழுமையாக ஆதரித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், தாக்குதல் நடத்தியவர்கள் முற்றிலும் மனிதாபிமானமற்ற கொடூரமான குற்றவாளிகள் என்றும், சட்டத்தின்படி அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய தாய்லாந்து அரசின் நடவடிக்கையைச் சீனா ஆதரிக்கிறது என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri