ஹிருணிக்காவுக்கு எதிரான இளைஞனை கடத்திய வழக்கு: விசாரணைக்கு உத்தரவு
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிபென்டர் வாகனத்தில் இளைஞனை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்குமாறு என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா (Amal Ranaraja) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பாணை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  
ஹிருணிக்கா பிரேமச்சந்திர  இளைஞனை கடத்தியதாக கூறப்பட்ட சம்பவம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது. 
 
    
     
    
     
    
     
    
     
    
    போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
 
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        