தலைமன்னாரில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று (21.03.2024 ) மன்னார் நீதவான் பிறப்பித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பினுல் நேற்று(20) இரவு அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்ட 7 இந்தியகடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.
கடற்படையினரின் விசாரணைகள்
இந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதோடு, கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்றொழிலாளர்களை இன்று (21) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை எதிர்வரம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை அடுத்த மாதம் ஏப்ரல் 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வருகைத்தந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், மூன்று படகுகளையும் அதிலிருந்து 25 கடற்றொழிலாளர்ர்களையும் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்துறை நீதிமன்று விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
