சுமேத மிகாரா குணரத்னவை தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு
முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் சுமேத மிகாரா குணரத்ன மீது பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கொடூரமாக தாக்குதல் நடத்திய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சித்திரவதை குற்றச்சாட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் எழுத்து பூர்வமாக பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
மிகாரா குணரத்ன என்ற சட்டத்துறை மாணவனை பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேகநபரை சந்திப்பதற்காக மிகாரா பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
