எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
எரிபொருள் பெற்றுக்கொள்வது, விநியோகிப்பது குறித்து பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது போன்ற விபரங்களுடன் குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலக் கெடு

எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ராணுவம், பொலிசார், சுகாதாரத்துறையினர் என்ற ரீதியிலேயே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் பௌத்த துறவிகளுக்கு எந்தவொரு நாளிலும் வரிசையில் நிற்காது எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ராணுவத்தினரும், பொலிசாரும் வழங்கி வருகின்றனர்.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam