யாழ்.பண்ணை சுற்றுப் பகுதியில் உள்ள எல்லைக் கற்களை அகற்றுமாறு உத்தரவு
யாழ்ப்பாணம்- பண்ணைச் சுற்று வட்டாரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட எல்லைக் கற்களை அகற்றுமாறு மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் தொல்லியல் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று(16) ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
வீதி விபத்துக்கள்
இதன்போது, தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல் ஜீவ சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள 48 எல்லைக் கற்களாலும் வீதி விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட் டது.
இந்த எல்லைக் கற்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அளவுப் பிரமாணங்களுக்கமைய, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எழுத்துமூல அனுமதியைப் பெற்று எல்லைக் கற்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலரால் அறிவுறுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



