தலைமன்னாரில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று (28) கைது செய்யப்பட்ட 23 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று (29.10.2023) மன்னார் பதில் நீதவான் வழங்கியுள்ளார்.
மலேரியா பரிசோதனை
மேலும், கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று குறித்த 23 இந்திய கடற்தொழிலாளர்ளும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று (29) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.