ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று (23) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடும்படி வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் அடிப்படையில், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் இன்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சக அதிகாரிகள் சரிபார்த்து பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |