இம்ரான் கானை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: பரிசீலனை மனுத் தாக்கல்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலனை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
பரிசீலனை மனு
ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள 'ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு' இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri