தெற்கு அதிவேக வீதியின் பணிப்பாளருக்கு காலி நீதிவான் பிறப்பித்துள்ள உத்தரவு
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வெளியேறும் இடத்திலிருந்து வெளியேறும் வாகனங்களின் சிசிடிவி காணொளிக் காட்சிகளை சமர்ப்பிக்குமாறு தென் அதிவேக வீதியின் பணிப்பாளருக்கு காலி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
2021, ஜூன் 5 மற்றும் 7 ஆகிய திகதிகளில் பதிவான காணொளி காட்சிகளையே காலி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவுக்கு சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெறுவதற்காக இந்த வீதியின் வழியாக ஏராளமான மக்கள் காலிக்கு சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக காலி பிரதேச குற்றங்கள் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை
பொறுப்பதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri