8 அமைச்சுகள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
எட்டு அமைச்சுகளுக்கான விடயப் பரப்புக்களை மறுசீரமைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளியிடப்பட்டிருக்கும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களம் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்ரூபவ் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்ட சிறுநீரக நிதியம்ரூபவ் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் கீழ் செயற்பட்ட விதாத மத்திய நிலையம் கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
வர்த்தக வாணிபம்
மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட உள்ளுர் விவசாய
உற்பத்திக்கான சந்தை வாய்ப்பினை விரிவாக்கல் மற்றும் ஆரம்ப பொருளாதார
மத்திய நிலையம் பற்றிய பிரிவுகள் விவசாய அமைச்சின் கீழ் கொண்டு
வரப்பட்டுள்ளன.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 11 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
