அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் மூலம் சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி விலையை அதிகரிக்க மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளை தடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய விளைபொருட்களை நேரடியாக கிராம சந்தைக்கு வழங்க முடிவு
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பது தொடர்பாக இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய விளைபொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராம சந்தைக்கு வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறைவதோடு, கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகள் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் இயலும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்வதற்கு எதிராக கடும் நடவடிக்கை
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்வதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
நாடளாவிய ரீதியில் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை செயற்படுத்துவது மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை வர்த்தகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய இடமளிக்காமல் கட்டுப்படுத்துவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan