ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு
ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
கொவிட் சட்டத்திற்கு அமைய, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் பொறுப்புள்ள படித்தவர்கள் என்பதனால், மக்களை தெளிவூட்டும் கடமை அவர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என கூறியுள்ள ஜனாதிபதி, வைரஸ் பரவிவரும் நிலையில், அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri