கைது செய்யப்பட்ட பீற்றர் இளஞ்செழியன் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பீற்றர் இளஞ்செழியனைத் தொடர்ந்தும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 31.12.21 அன்று தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் இன்று வரை ( 04 ஆம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பீற்றர் இளஞ்செழியன் மீது மோசடிக் குற்றச்சாட்டு உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்னிலையில் இன்று (04) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது
விசாரணைகள் நிறைவடையாத நிலையில் எதிர்வரும் 18.01.2022 ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
