மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி! முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
வரலாற்று ரீதியாக மக்கள் சமூகம் மற்றும் கலாசாரம் சார்ந்த உணர்வுபூர்வமான விவகாரங்களில் பிணைந்துள்ள நிலையில், அத்தகைய உணர்வுகளை தற்போதைய அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்துக்காகவும் ஆட்சியைத் தக்க வைக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் பெரும்பான்மையான பொதுமக்கள் தற்போது கடுமையான வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். உலக வங்கியின் தரவுகளுக்கமைய நாட்டின் கணிசமான பகுதி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
அரசின் வறுமைக் கோட்டுத் தரவுகளின்படி பார்த்தால், ஒரு நாளைக்கு 600 ரூபாவுக்கும் குறைவான வருமானத்திலேயே மக்கள் வாழும் நிலைமை காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி, சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பொருளாதார நெருக்கடிகளினால் எதிர்காலத்தில் மக்கள் மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் போன்ற கடுமையான விதிகளின் மூலம் மக்களின் அடிப்படைப் போராட்ட உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
மக்களின் உண்மையான பொருளாதாரச் சிக்கல்களை மறைப்பதற்காகவே சமூகம் மற்றும் கலாசாரம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் அரசியல் மேடைகளில் வேண்டுமென்றே முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அரசு மட்டுமன்றி, நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியும் உண்மையான மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறி, இத்தகைய திசைதிருப்பல் விவகாரங்களையே விவாதப் பொருளாக்கி வருகின்றது.
இது மறைமுகமாக அரசு தனது தவறான பாதையை நியாயப்படுத்தவே வழிவகுக்கின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் நாட்டின் பிரதான விவாதப் பொருளாக மாற்றுவதற்கு விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri