ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச கூறுகின்ற போதிலும் அந்தக் கட்சிக்குள் அதிகமானவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் உடன்பாடில்லை என்று அறியமுடிகின்றது.
அதற்குக் காரணம் அடுத்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் தோல்வியடையப் போவது நிச்சயம்.
ஜனாதிபதிக்குத் தூது
அப்படி தோல்வியடைந்தால் பலரது 'ஓய்வூதிய திட்டம்' கூட இல்லாமல்போகும். அவர்களது ஓய்வூதிய திட்டத்தையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாடாளுமன்ற ஆயுட் காலம் முடிவடைந்த பின்பே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனால், அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துமாறு ஜனாதிபதிக்குத் தூது அனுப்பி வருகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri