மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(05.10.2024) இடம்பெற்றுள்ளது.
தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நீர்வேலிப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை தொடர்ந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவரும் நிலையில், அதனை உடனே நிறுத்துமாறு கோரி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டம்
இதற்கமைய நீர்வேலி பகுதியில் அத்தியார் இந்துக்கல்லூரி, கந்த சுவாமி கோவில் என்பவற்றிற்கு அருகிலே குறித்த மதுபான சாலை திறக்கப்படவுள்ளதால் பாடசாலை மாணவர்கள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும், குறித்த விடயம் அடங்கிய மனு ஒன்றிணையும் கோப்பாய் பிரதேச உதவி பிரதேச செயலர் சஞ்சீவன் ராதிகாவிடம் பொதுமக்கள் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam