கனடாவில் ஈழத்தின் இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு
இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
டொராண்டோ(Toronto) பகுதியின் பிரம்டன்(Brampton) எனப்படும் நகராட்சி பகுதியில் இந்த நினைவிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா அண்மையில் நடைபெற்றது.
இலங்கையின் ஆட்சேபனை இருந்தபோதிலும், இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் பிராம்ப்டன் நகரத்தின் முதல்வர்; பேட்ரிக் பிரவுன் இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி நிராகரிப்பு
இதேவேளை ஒட்டாவாவிலும் இதேபோன்ற நினைவுச்சின்னம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் நகராட்சி முதல்வர் அதனை நிராகரித்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
