கனடாவிற்கு எதிராக இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்: நாடாளுமன்றில் விமல் சீற்றம் (Video)
கனடாவிற்கு எதிராக இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (23.05.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, கனடாவில் பூர்வ குடிமக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதற்கு எதிராக இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
கனேடியப் பிரதமர் கடந்த 18ஆம் திகதியை இலங்கையின் இனப்படுகொலை தினமாக பிரகடனம் செய்து, இலங்கைக்கு பாரிய அபகீர்த்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவின் பூர்வ குடிகள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன், 1986ஆம் ஆண்டு மீதமாக இருந்த பிள்ளைகளையும் அவர்கள் கொலை செய்தனர் எனவும் மனித எச்சங்கள் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
