இலங்கையின் ஜனநாயகம் என்பது இனவாதத்தின் பிடியில் சிக்குண்டுள்ளது: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசகட்டமைப்புக்களின் விளைவாய் ஜனநாயகம் என்பது தடம் புரண்டு சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடியில் சிக்குண்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுதந்திரத்தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் கரிநாள் பேரணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ மக்கள் கரிநாள்
''இலங்கையின் 76 வது சுதந்திரதினத்தை வழமைபோல் தமிழீழ மக்கள் கரிநாளாக அனுஷ்டிக்கும் இந்நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இனவழிப்பு சிறிலங்கா அரசுக்கு எதிரான எமது போர்க்குரலை ஓங்கி முரசறைகிறோம்.
இலங்கைத்தீவு காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டபோது காலனித்துவவாதிகளால் பறிக்கட்ட்ட ஈழத்தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களுக்கே உரித்தானதாகியிருக்க வேண்டும்.
இருந்தும், சிங்கள அரசியல் தலைவர்களும் பிரித்தானிய காலனித்துவ்வாதிகளும் இணைந்து பின்னிய அரசியல், இராஐதந்நிரப்பொறிக்குள் தமிழ் மக்கள் அவர்களது சம்மதம் இன்றியே வீழ்த்தப்பட்டார்கள்.
இலங்கைத்தீவின் அரசை சிங்கள பௌத்த இனவாத அரசாக வளர்த்தெடுப்பதற்கான அடிப்படைகளை சிங்களத் தலைவர்கள் பிரித்தானிய காலனித்துவவாதிகளின் சம்மதத்துடனேயே உருவாக்கிக் கொண்டார்கள்." என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |