டீசல் மின்சார உற்பத்திற்கு நான் எதிரானவன்: எதிர்கட்சி தலைவர்
புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி திட்டங்களை ஆரம்பிக்கும் போது போட்டித்தன்மை அவசியம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் மின்சக்தி சட்டமூல திருத்தச்சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருத்தச்சட்ட மூலம்

அமைச்சர் கஞ்சன விஜயசேகர இந்த திருத்தச்சட்ட மூலத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதன்பின்னர் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற சஜித் பிரேமதாச, பாரிய திட்டங்களுக்கு போட்டித்தன்மை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாச

“இதன்போது, 10 மெகாவோட்ஸூக்கு குறைந்த உற்பத்தி தளத்துக்கு போட்டித் தன்மையில்லாமல், விலையை தீர்மானிக்க முடியும். எனினும் 10 மெகாவோட்ஸூக்கு அதிகமான உற்பத்தி தளங்கள் அமைக்கப்படும் போது அவற்றுக்கு போட்டித்தன்மை இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே டீசல் மூலமான மின்சார உற்பத்தியை தவிர்த்து புதுப்பிக்கப்பட்ட மின்சக்திக்கு செல்லும் திட்டம் தொடர்பான இந்த யோசனையை ஒரு வாரத்துக்கு பிற்போட்டு, கலந்துரையாடல் மூலம் உரிய தீர்மானத்தை எடுக்கமுடியும்.
அதேவேளை டீசல் மூலமான மின்சார உற்பத்திற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்க போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan