சஹ்ரான் புலனாய்வுத்துறை அதிகாரிகளை சந்தித்த விடயம்: அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமத்தியக் குற்றச்சாட்டு தொடர்பில் நாளைய தினம், நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியதாரியான சஹ்ரான் ஹாசிம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை சந்தித்தார் என்று அவரின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், இந்த அதிகாரியே “மாலு மாலு“ விருந்தகத்தில் தங்கியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்தில் தொிவித்திருந்தனர்.
அத்துடன் கெலனிகமே இடைமாறல் பகுதியில் இரண்டு ஆயுதப் பாரவூர்திகள் கைப்பற்றப்பட்டன.
எனினும் அவை பின்னர் விடுவிக்கப்பட்டன என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையிலேயே அரசாங்கத்தின் அறிக்கையை தாம் சமர்ப்பிக்கவுள்ளதாக சரத் வீரசேகர தொிவித்துள்ளார்

பதினாறாவது மே பதினெட்டு 18 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
