எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு
எமது கட்சிக்குள் எவ்வித உள்ளக முரண்பாடுகளும் இல்லை. எம்மில் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் சஜித்தையே எதிர்பார்க்கின்றனர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த பொதுத் தேர்தலில் எமக்கு 54 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் ஐ.தே.கவுக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. மக்களின் ஆணை அதுவே.

அவ்வாறிருக்கையில் எம்மால் எவ்வாறு அவர்களுடன் இணைய முடியும்?
இனிவரும் எந்தத் தேர்தலிலும் நாம் தனித்தே போட்டியிடுவோம். எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
ரணில் மற்றும் சஜித் இணைய வேண்டும் என்ற அவ்வாறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியே பரப்புகின்றது.
ஐ.தே.கவினர் கிராமங்களுக்குச் செல்லும் போது கிராம மக்கள் சஜித்தையே எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam