மின் பந்தங்களுடன் நாடாளுமன்றத்திற்கு சென்ற எதிர்க்கட்சியினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்குள் மின் பந்தங்களை (டோச்) எடுத்து வந்ததன் காரணமாக நாடாளுமன்ற அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சியினர் இவ்வாறு மின் பந்தங்களை எடுத்து வந்துள்ளனர்.
எதிர்க்கட்சியினரின் இந்த எதிர்ப்புக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல் என கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வர ஆளும் கட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்திகள் குறைந்துள்ளதுடன் மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
