அநுரவிற்கு எதிராக கிளம்பிய எதிர்க்கட்சிகள்: டொலரின் பெறுமதி வீழ்ச்சி
எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க அரசு செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான மாற்று வழியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசு சிங்களப் புத்தாண்டுச் சுபநேரங்கள் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, நாட்டின் இராணுவத்தினரை நினைவுகூரும் விடயத்தில் அரசு காட்டும் ஆர்வமின்மை கவலையளிக்கின்றது.
நாம் நாட்டை ஒப்படைத்தபோது 224 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி, இன்று 329 ரூபா வரை அதிகரித்துள்ளது.
குறையும் வெளிநாட்டு முதலீடுகள்
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகின்றார்கள். முதலீடுகள் வந்திருந்தால் டொலரின் மதிப்பு ஏன் குறையவில்லை?

அரசின் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தச் சூழ்ச்சிகள் நடக்கின்றன, அனைத்துத் தலைவர்களுடனும் பேசி, உண்மைகளை ஆராயும் ஒரு பொதுவான எதிர்க்கட்சி அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். மக்களின் பணத்தில் இதுவரை 2.5 பில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, அரசின் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஜனநாயகத்தை நசுக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 50 நிமிடங்கள் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam