ஜனாதிபதியைக் கண்டால் பதுங்கும் எதிர்க்கட்சியினர்! லக்மாலி ஹேமச்சந்திர எம்.பியின் கிண்டல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு பகிரங்கமாகக் கிண்டல் தொனியில் குறிப்பிட்டார்.
சவாலுக்கு உட்படுத்த முடியாது
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது எதிர்க்கட்சியினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி சபையில் இல்லாத சந்தர்ப்பங்களில் சிங்கங்களைப் போலக் கர்ஜிக்கும் எதிர்க்கட்சியினர், அவர் சபைக்குள் நுழைந்ததும் அப்படியே பூனைக்குட்டிகளாக அடங்கிப் போகின்றனர்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருவதையே எதிர்க்கட்சியினர் தற்போது எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பும் உரிமையும் ஜனாதிபதிக்கு உள்ளது.
அதனை எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.