உதயங்க மற்றும் கிமர்லி பெர்னாண்டோவுக்கிடையிலான முறுகல் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதரும் தற்போதைய சுற்றுலா ஊக்குவிப்பாளருமான உதயங்க வீரதுங்க மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோவுக்கு இடையேயான முறுகல் குறித்து எதிர்க்கட்சி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது.
உதயங்க வீரதுங்க மற்றும் கிமர்லி பெர்னாண்டோ ஆகியோர் தங்களது சொந்த விருந்தகங்களுக்கு வருமானத்தை பெறுவதற்காக தங்களுக்குள் போட்டியிடுகிறார்கள் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உக்ரைனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தமக்கு தொடர்புடைய விருந்தகங்களில் தங்க வைக்க கிமார்லி பெர்னாண்டோ விரும்புவதாக உதயங்க ஊடகம் ஒன்றின் மூலமாக வீரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கிமர்லியை பொறுத்தவரை அவர் 30 அறைகளுக்குக் குறைவான விருந்தகங்களிலேயே தங்கவைக்க விரும்பினார் என்று உதயங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கம் நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை. தனி ஆட்களுக்கு உதவுவதை மட்டுமே பார்க்கிறது என்று கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தினார்.