அரசின் நல்ல நடவடிக்கைகளுக்கு தடையாகச் செயற்படும் எதிரணிகள்! வாசுதேவ கடும் விசனம்
அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறு விடயங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசைச் சுற்றிவளைத்து வருகின்றனர் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்
"வருமான வரி செலுத்தாமல் புறக்கணிப்பவர்களை அதற்கு உட்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மக்களை தூண்டிவிடும் எதிர்க்கட்சி
பழைய சட்டங்களின்படி வரி மேன்முறையீட்டு வழக்குகள் முடிவடைய 15 ஆண்டுகளுக்கும் மேல் சென்ற நிலையில், குற்றவியல் வழக்குத் தொடுக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல், வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பணத்தை 30 நாள்களுக்குள் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வெளிநாட்டுச் செலவாவணிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் பிரசாரம் செய்து மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிக்கு எதிரான எதிர்ப்புகள், விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் புத்தசாசனத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் தமது சுயநலனுக்காக அரசின் மக்கள் நல நடவடிக்கைகளுக்குத் தடையாகச் செயற்பட்டு வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri