பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க எதிர்க்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் வேண்டும்! - இம்ரான் மஹ்ரூப் வலியுறுத்தல்
இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க எதிர்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிடட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வருகைதரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு உள்ளிட்ட இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கித்தருமாறு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
இதுவரை இது தொடர்பாக சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவருக்குக்கூட இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
பாகிஸ்தான் பிரதமரை எதிர்க்கட்சியினர் சந்திக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என அறியக்கிடைத்தது.
ஜனநாயக நாடு என்ற ரீதியில் இம்ரான்கானை சந்திக்க எதிக்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.