எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு அஞ்சுகின்றன
நாட்டின் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு அஞ்சுகின்றன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அரசியல் களத்தில் இருக்கும் கட்சிகள் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று ஒன்றிணைந்து கொண்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு இணையவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தங்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள சவாலை முறியடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இன்று கரம் கோர்த்துக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சுனாமி, கொரோனா அனர்த்தங்களின் போது கூட தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இன்று தங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற காரணத்தினால் இன்று அவர்கள் ஒன்றிணைந்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஓர் சுயநலவாத அணி திரளுகையாகவே இதனை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது மெய்யான கரிசனையுடன் இந்த எதிர்கட்சிகள் செயல்படவில்லை என நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியில் நன்மதிப்பு அதிகரித்துள்ள காரணத்தினாலும் இந்த அரசாங்கம் வலுவானது என்றதன் காரணமாகவும் எதிர்கட்சிகள் அச்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



